சவேந்திர சில்வா விடயத்தில் அரசியல் இலாபம் பெற முயற்சி! சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

Report Print Kanmani in அரசியல்

அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டமையினால் முதலாவதாக நானே பாதிக்கப்பட்டேன். அப்போது பேசாதவர்கள் தற்போது சவேந்திர சில்வா விடயத்தில் முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டு அரசியல் இலாபம் தேடுவதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பிணை முறி தொடர்பான மத்திய வங்கி தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அப்போது இது தொடர்பாக பேசாதவர்கள் தற்போது சவேந்திர சில்வா விடயத்தில் முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டு அது பற்றி பேசுவது அரசியல் இலாபம் தேடுவதற்காகவே.

எவ்வாறாயினும் தற்போதைய இராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது அல்ல. அவருக்கு ஏற்பட்டுள்ள நிலையை நானும் எதிர்க்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.