இந்தியா - சீனாவிடம் இருந்து முதலீடுகளை எதிர்பார்க்கும் ஜனாதிபதி!

Report Print Ajith Ajith in அரசியல்
34Shares

இந்தியா - சீனா மற்றும் மேற்கத்தைய நாடுகள் தமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளன.

எனவே இந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு முதலீடுகள் எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் இன்று முதல்தடவையாக கலஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டார்

தமது அரசாங்கம் நாட்டின் பாதுகாப்புக்கு முதல் இடத்தை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் புலனாய்வு மற்றும் பாதுகாப்புக்காக தகுதிவாய்ந்த அதிகாரிகளை நியமித்துள்ளமையால் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் தலைதூக்குவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நீதித்துறைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் அனைவருக்கும் சம சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் கோட்டாபய தெரிவித்தார்