ஜெனிவா யோசனையில் இருந்து விலகியதால் அதிகார பரவலாக்கல் இரத்து

Report Print Steephen Steephen in அரசியல்
839Shares

ஜெனிவா யோசனையில் இருந்து விலகுவதாக அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிமேலி பெச்லட்டுக்கு அறிவித்துள்ளதால், இறுதிக்கட்ட போர் தொடர்பான நீதி பொறிமுறையை ஏற்படுத்துவது மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை பரவலாக்குவது போன்ற விடயங்கள் இரத்தாகும் என தெரியவருகிறது.

2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஜெனிவா யோசனையில் போர் குற்றங்களை எதிர்நோக்கும் படை அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து தண்டனை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் எனவும் யோசனையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஜெனிவா யோசனைக்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெறவில்லை என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

ஜெனிவா யோசனைக்கு இணங்கியதன் மூலம் இலங்கை படையினர் போர் குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதை கடந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்தது எனவும் ஆளும் கட்சி விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

இதனிடையே ஜெனிவா யோசனையில் இருந்து இலங்கை விலகுவதாக அறிவிப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அடுத்த வாரம் ஜெனிவா செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.