ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட யோசனையால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கையின் அனுசரணையுடனான 30-1 யோசனையால் இலங்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா இந்தக்கருத்தை இன்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

நாட்டுக்கு பாதிப்பை கொண்டு வந்துள்ளதாக கூறி ஐக்கியநாடுகளின் யோசனையில் இருந்து விலகிக்கொள்ளப்போவதாக அரசாங்கம் கூறுகிறது

எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இரண்டு யோசனைகளில் இருந்து மட்டும் விலகப்போவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

எனவே அரசாங்கம் முழுமையாக இந்த யோசனையில் இருந்து விலகப்போகிறதா? அல்லது இரண்டு யோசனைகளில் இருந்து மாத்திரம் விலகப்போகிறதா?என்பது கேள்விக்குரிய விடயங்களாகும் என்றும் அஜித் பி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசாங்கம் மக்கள் பிழையாக வழிநடத்துகிறது என்றும் பெரேரா குற்றம் சுமத்தினார்.

முன்னைய அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அனுசரணை வழங்கப்பட்ட 30-1, 401-1 முறையே 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அனுசரணை வழங்கப்பட்ட 30-1, 40-1 யோசனைகளில் இருந்தே விலகப்போவதாக நடப்பு அரசாங்கம் கூறுகிறது.

இந்த யோசனைகள் பின்னர் அமைச்சரவை உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்