பொதுத்தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தல் நிலுவை பணத்தை செலுத்துமாறு கோரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில் ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலுக்கான செலவில் ஒரு பில்லியன் ரூபாவை செலுத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு திறைசேரியை கோரியுள்ளது.

இது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் திறைசேரியின் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது பொதுத்தேர்தலின் போது ஏற்படவுள்ள செலவுகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடி உள்ளனர்.

இதுவரை மதிப்பீட்டின்படி பொதுத்தேர்தலுக்கான செலவு 5,5000 மில்லியன் மற்றும் 6,000 மில்லியன் ரூபாவுக்கு இடைப்பட்டதாகும்.

இது சிலவேளைகளில் 7000 மில்லியன்களாகவும் உயரக்கூடும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான பணியாளர்களை பொறுத்தவரை 20000 முதல் 30000 வரை தேவைப்படும்.

இந்தநிலையில் அடுத்த வாரம் திறைசேரி அதிகாரிகளை சந்திக்கும்போது தேர்தல்கள் ஆணைக்குழு செலவுத் தொகைகளின் சரியான தகவல்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஜனாதிபதி பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டவுடன் புதுவருட விடுமுறையை கருத்தில் கொண்டு தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.