நாடாளுமன்ற உறுப்பினரை பயமுறுத்தி பணம் பெற்றவர் வசமாக சிக்கினார்

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இஸாக் ரஹ்மானை பயமுறுத்தி பணம் பெற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து 5 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டபோதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்ட காணொளி ஒன்றை அகற்றுவதற்காகவே இந்த பணத்தை குறித்த நபர் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் கெக்கிராவ நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிரவ்ரும் மார்ச் ஐந்தாம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.