ஐக்கிய நாடுகளின் யோசனையில் இருந்து இலங்கை முழுமையாக விலகிக் கொள்ளவில்லை

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 யோசனையின் இணை அனுசரணையில் இருந்தே இலங்கை விலகிக்கொள்ளவுள்ளது.

எனினும் அமெரிக்காவின் அனுசரணையில் கொண்டு வரப்பட்ட குறித்த யோசனையில் இருந்து முழுமையாக விலகிக் கொள்ளவில்லை என்று வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவரத்தன தெரிவித்துள்ளார்.

இந்த இணை அனுசரணைக்கு இலங்கையின் அமைச்சரவையில் அனுமதிப் பெறப்படவில்லை என்பதை காரணம் காட்டியே அதில் இருந்து விலகுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கைப் படையினருக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய யோசனைக்கு இலங்கையே அனுசரணை வழங்க முடியாது என்ற நிலைப்பாடும் இங்கு கருத்திற்கொள்ளப்பட்டது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா இது தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இலங்கை இணை அனுசரணையில் இருந்து விலகுவதால் யோசனையின் நடைமுறையில் மாற்றம் இருக்காது என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தநிலையில் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகுமானால் குறித்த யோசனையை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு சர்வதேசம் கொடுக்கும் அழுத்தம் தீவிரமாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.