மலையக மக்களை அவமதிக்க வேண்டாம்! மனோ கணேசன்

Report Print Steephen Steephen in அரசியல்

யானை சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னத்தை பயன்படுத்தினால் மலையக தமிழ் மக்கள் அதனை சரியாக உள்வாங்கிக்கொள்ள மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சிலர் வெளியிடும் கருத்துக்கள் அந்த மக்களை அவமதிக்கும் செயல் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

வரலாற்றை எடுத்துக்கொண்டால் மலையக தமிழ் மக்கள் யானை, அன்னப்பறவை போன்ற பல சின்னங்களுக்கு வாக்களித்துள்ளனர்.

நகர் புற மக்களை போன்று அல்ல, தெளிவாக சின்னம் குறித்து கூறினால், அந்த சின்னத்தை தேடி வாக்களிக்கக் கூடியவர்கள் மலையக மக்கள்.

எவருக்காவது சின்னம் பற்றிய பிரச்சினை இருந்தால் அதனை கூறுங்கள். எனினும் மலையக தமிழ் மக்களுக்கு சின்னம் தொடர்பான பிரச்சினையில்லை என குறிப்பிட்டுள்ளார்.