திருடர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும்: எஸ்.எம்.மரிக்கார்

Report Print Steephen Steephen in அரசியல்

மாறி மாறி நடக்கும் கொள்ளையடிப்பை நிறுத்த வேண்டுமாயின் இரண்டு தரப்பில் இருக்கும் திருடர்களை தேர்தலில் தோற்கடிக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்மையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எயார் பஸ் கொள்வனவில் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்ளையிட்டவர்கள் தொமர்பான விபரம் வெளியாகியுள்ளது.

நாட்டின் சாதாரண மக்களின் பணத்தை மாறி மாறி கொள்ளையிட இரண்டு தரப்பில் இருக்கும் திருடர்களுக்கு இடமளிப்பதா, இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

மக்களே வாக்களித்து விருப்பு வாக்கை வழங்கி இவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புகின்றனர்.

சாதாரணமாக 60 வயதை கடந்து விட்டால், எவருக்கும் அரசாங்க தொழில் ஈடுபட முடியாது. இதனால், மாறி மாறி கொள்ளையடிப்பவர்களை மாற்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

திருடர்கள் பதவிக்கு வந்தால், மற்றைய கட்சியில் உள்ள திருடர்களை பாதுகாப்பார்கள். திருடர்கள் திருடர்களை பிடிக்க மாட்டார்கள்.

இம்முறை இரண்டு தரப்பில் இருக்கும் திருடர்களை தோற்கடிப்பது மக்களின் பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்.