தேர்தலில் போட்டியிட சின்னத்தை விட கொள்கையே முக்கியம்! அஜித் மான்னப்பெரும

Report Print Steephen Steephen in அரசியல்

தேர்தலில் போட்டியிடும் போது சின்னத்தை விட முன்வைக்கும் கொள்கையே முக்கியமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று செய்தியாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்து.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியின் கீழ் தேர்தலில் போட்டியிடுவது என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட வேண்டிய சில சின்னங்களில் ஒரு சின்னத்தை தெரிவு செய்ய நேரிட்டுள்ளது.

யானை சின்னத்தை கூட்டணியின் சின்னமாக பெற்றுக்கொள்ள முயற்சித்த போதிலும் அதில் சட்ட சிக்கல் உள்ளது.

வாக்காளர்கள் வாக்களிப்பது சின்னத்திற்கு அல்ல கொள்கைக்கு எனவும் மான்னப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.