இலங்கையின் இராணுவத்தளபதி மீது அமெரிக்கா விதித்த தடையானது, இலங்கைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை, இலங்கையை அடிபணிய வைத்து இலங்கையை வழிக்கு வரவைத்தல் அல்லது இலங்கையின் சாதாரண மக்களையும் அமெரிக்காவுக்கு எதிராக திருப்புவது என்று கருதலாம்.
இந்த கருத்தை ஆங்கில ஊடகம் ஒன்று பதிவுசெய்துள்ளது.
இலங்கையின் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிராக விதித்துள்ள தடையின்போது போர்க்குற்றங்கள் தொடர்பான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் ஏற்கனவே ஈராக்கிய முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசைனுக்கு எதிராக அமெரிக்கா குற்றம் சுமத்தியபோதும் பாரியளவில் சேதங்களை ஏற்படுத்தக்கூடிய அவர் வைத்திருப்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தது என்பதை ஆங்கில ஊடகம் கோடிட்டுள்ளது.
இதேவேளை சோபா மற்றும் எம்சிசி உடன்படிக்கைகளை இலங்கையில் நடைமுறைப்படுத்த முனையும் அமெரிக்கா இந்தவேளையில் இராணுவதளபதிக்கு எதிராக தடையை விதித்துள்ளமையானது எந்தளவுக்கு அந்த உடன்படிக்கைகளை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்காவுக்கு உதவப்போகிறது
என்பது தொடர்பில் ஆங்கில ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவின் இந்த தீர்மானத்துக்கு எதிராக இலங்கை நேரடியாக போராடக்கூடிய தகுதியை கொண்டிருக்கிறதா என்பதும் கேள்விக்குரியது என்று ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.