தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு?

Report Print Rakesh in அரசியல்

இலங்கையில் போரின் போது நடந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் மூன்று இராணுவத்தினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மன்னிப்பை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய இந்தப் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

கொழும்பு மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்றங்களில் நடந்த வழக்கு விசாரணைகளில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு இராணுவ அதிகாரிகளுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பொது மன்னிப்பு வழங்க முடியுமா என்பதை ஆராய மரணதண்டனை விதித்த மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளிடம் ஜனாதிபதி அறிக்கைகளை பெறவும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.