மாற்றுக்கோணத்தில் மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபாலவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்

Report Print Ajith Ajith in அரசியல்

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டு சேர்ந்த பின்னர் அந்தக்கட்சியின் முழுமைக் கட்டுப்பாடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கைகளுக்கு சென்று விட்டது.

இது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மைத்திரிபாலவுக்கு கையளித்துவிட்டு சென்ற மஹிந்த ராஜபக்ச மீண்டும் அந்தக்கட்சியை வேறு ஒரு கோணத்தில் தமது ஆதிக்ககத்துக்குள் கொண்டு வந்துவிட்டார் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

அதேநேரம் மஹிந்த ராஜபக்சவுடன் காலை உணவை முடிக்கும் வரையில் சொல்லாமல் 2015ஆம்ஆண்டில் மஹிந்தவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற மைத்திரி இன்று கையாளாகாதவராக மாறியுள்ளார்.

அவர் தற்போது அரசியல் இருப்புக்காக மஹிந்தவிடம் சரணடைந்துவிட்ட நிலையே ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக மஹிந்த சொல்லாதபோதிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரிபாலவை விமர்சிக்கின்றனர். அவரை கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளவேண்டாம் என்று அவர்கள் கோரிவருகின்றனர்.

எனினும் மைத்திரிபால சிறிசேன தமக்கு அரசியல் அடைக்கலம் கொடுத்தமைக்காக கோட்டாவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்கப்போவதாக உறுதியளித்து வருகிறார்.

இந்தநிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக வேட்பாளர்கள் தெரிவின்போது இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பிரச்சினைகள் தோன்றினாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை விட்டு செல்லாது என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.