வரலாற்றில் எந்தவொரு எதிர்க்கட்சி தலைவரும் இவ்வாறு நடந்துகொள்ளவில்லை! பந்துல குணவர்தன குற்றச்சாட்டு

Report Print Ajith Ajith in அரசியல்

அபிவிருத்தி திட்டங்களுக்கு கடந்த அரசாங்கம் செலுத்தாத கொடுப்பனவுகளுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவே பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னைய அரசாங்கம் கொடுப்பனவுகளை செலுத்தாமை காரணமாக ஒப்பந்தக்காரர்கள் பாரிய நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனை அடுத்து கடந்த வாரத்தில் அரசாங்கம் கணக்கு வாக்கெடுப்பு யோசனையை நாடாளுமன்றில் முன்வைத்தது. எனினும் அதனை எதிக்கட்சி தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

வரலாற்றில் எந்த ஒரு எதிர்க்கட்சி தலைவரும் இவ்வாறு நடந்துகொள்ளவில்லை.இந்த நிலையில் தேர்தலுக்கு பின் குறித்த கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

2009இல் அரசாங்கத்தின் வருமானம் 2380 பில்லியன் ரூபாய். செலவீனங்கள் 4550 மில்லியன் என்றும் தெரிவித்துள்ளார்.