இந்தியாவும் புதிய மாற்றங்களை கொண்டு வரவேண்டும்! ரணில் ஆலோசனை

Report Print Ajith Ajith in அரசியல்

எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட விடயங்களில் அயல்நாடுகள் தமது பிரச்சினைகளை களைய முயற்சிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இல்லையேல் வெளியார் வந்து உங்களிடம் வந்து பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெங்களூரில் இடம்பெற்ற இரண்டு நாள் அமர்வின்போது ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

சார்க் நாடுகளுக்கு மத்தியில் பிராந்திய ஒத்துழைப்பு, பொருளாதார மற்றும் பாதுகாப்பு விடயங்களில் உயர்மட்ட இணைந்துசெயற்படல் அவசியமாகும்.

2017ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான பதற்றம் காரணமாக சார்க் மாநாடு பிற்போடப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

வங்களா விரிகுடாவே உலகில் பாரிய விரிகுடாவாகும். இந்த விரிகுடாவுக்குள் பழையான நகரங்கள் அந்தமான் புக்கட் உட்பட்ட கடற்கரைகள் மற்றும் சுற்றுலாவுக்கான அனைத்து அம்சங்களும் உள்ளன.

எனவே இந்த பிராந்தியத்தில் புதிய வர்த்தகங்களை ஆரம்பிக்கமுடியும். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பொறுத்தவரையில் மஹிந்த ராஜபக்ச, சீன ஜனாதிபதியுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை மாற்றியமைக்க 2015ஆம் ஆண்டு எமது அரசாங்கம் முயன்றது.

எனினும் இறுதியில் பாதுகாப்பு உட்பட்ட அனைத்து விடயங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக உடன்படிக்கையை செய்துககொண்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.

பிராந்தியத்தை பொறுத்தவரை சீனாவின் பெரிய கப்பல்கள் வரமுடியாது. சீனாவை வலுவான ராஜதந்திர பொருளாதாரம் போன்று வியாபிக்க வேண்டுமால் இந்தியாவும் புதிய மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.