யாழில் களமிறங்கவுள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை

Report Print Rakesh in அரசியல்

நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கிளிநொச்சியில் நேற்று நடைபெற்றது. அதன் பின்னர் இடம்பெற்ற வேட்பாளர் நியமனக் குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் அது தொடர்பில் ஆராயப்படும் என்றும், அது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது என்றும் இதன்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி போட்டியிடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் வேட்பாளர் நியமனக் குழுவே இறுதி முடிவு எடுக்கும் என்று, கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.