கொழும்பு மேயர் ரோசியின் மகன் அரசியலில் பிரவேசம்

Report Print Ajith Ajith in அரசியல்

கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்கவின் மகன் கனிஷ்க சேனாநாயக்க ஐக்கிய தேசிய முன்னணியின் ஊடாக அரசியலில் பிரவேசிக்கிறார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பை வழங்கவுள்ளதாக ரோசி சேனாநாயக்க நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்தார்.

தமது மகன் கனிஷ்கவை தேர்தலில் போட்டியிடச் செய்யும் முகமாக பொதுவான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எனவே தாம் விட்டுக்கொடுக்க தயார் என்று சேனாநாயக்க கூறியுள்ளார். எனினும் கட்சி தலைவர்களே இதனை தீர்மானிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ரோசி சேனாநாயக்க பொதுத்தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.