இலங்கை பொது நிதியில் பாரிய தட்டுப்பாட்டுநிலை- எதிர்க்கட்சி

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையில் பொதுநிதியில் பாரிய தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

இதற்கு ஆளும் கட்சியின் நிதிக்கொள்கையே காரணம் என்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் காரணமாக வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்படவில்லை. எனினும் மூன்று மாதத்துக்கான குறைநிரப்பு யோசனையை கொண்டு வந்து நிதி கையாள்கையை மேற்கொண்டது.

இந்தநிலையில் தற்போது ஆளும் கட்சி கொண்டு வந்துள்ள குறைநிரப்பு நிதித்தொகை 156 மில்லியன் ரூபாய்கள்.

புதிய செலவுகள் 357 மில்லியன் ரூபாய்களாகும் எனினும் இந்த குறைநிரப்புக்கு நாடாளுமன்றில் எதிர்க்கட்சி ஆதரவு வழங்கவில்லை.

ஏற்கனவே கொடுப்பனவுகள் செலுத்தவேண்டியிருந்த நிலையில் ஆளும் கட்சி தாம் ஆட்சிக்கு வந்தவுடன் வரிகளை குறைத்தது.

இதன் காரணமாகவே தற்போது துண்டு விழும் தொகை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆளும் கட்சி உரியவகையில் பொருளாதாரத்தை திட்டமிடாமையே இதற்கான காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் 2020 ஆம் ஆண்டின் பிந்தியக்காலத்தில் பொருளாதாரம் சீரடைந்ததும் மீண்டும் வரிகளை அதிகரிக்கலாம் என்று கோட்டாபயவின் அரசாங்கம் எதிர்ப்பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.