ஏப்ரல் 25 பொதுத்தேர்தல் உறுதி! சூடுபிடிக்கிறது அரசியல் களம்

Report Print Rakesh in அரசியல்

எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மே 7ம் திகதி வெசாக் பண்டிகை வருவதால் மே முதல் வாரத்திலேயே பௌத்த ஆன்மீக நிகழ்வுகள் ஆரம்பமாகிவிடும்.

எனவேதான் அதற்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துவதற்கும் அதற்கான ஏற்புடைய திகதி ஏப்ரல் 25 எனவும் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆளும், மற்றும் எதிர்க்கட்சிகளின் சார்பில் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்ட அடிப்படையில் ஏப்ரல் 25ம் திகதி தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

இதற்காக மார்ச் 2ம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிடுவார். மார்ச் 12 முதல் 19 திகதிகளுக்குள் வேட்பு மனுக்கள் கோரப்படும்.

அதேவேளை, பிரதான அரசியல் கட்சிகள் யாவும் இன்று முதல் தேர்தலுக்கான பூர்வாங்க நடவடிக்கையில் இறங்கவுள்ளன.

வேட்புமனு குழு அமைத்தல், தொகுதி அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குதல் எனத் தேர்தல் காலத்துக்கே உரித்தான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், முக்கியமான சில சந்திப்புகளும் கொழும்பில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.