ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளராக விமல் வீரவன்ச நியமனம்

Report Print Ajith Ajith in அரசியல்

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் முதலாவது நிறைவேற்றுக்குழு கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.

அலரிமாளிகையில் இந்தக்கூட்டம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக்கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, ஸ்ரீலங்கா மக்கள் கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி , கம்யூனிஸக்கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி,தேச விமுக்தி மக்கள் கட்சி போன்ற கட்சிகளின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது ஐந்து புதிய அரசியல் கட்சிகள் இணைந்த முன்னணியை நிறைவேற்றுக்குழு அங்கீகரித்தது. ஏற்கனவே இந்த முன்னணிக்குள் ஈழமக்கள் ஜனநாயக்கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலை கட்சி, ஐக்கிய மக்கள் கட்சி என்பன உள்வாங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் முன்னணியின் உதவி தவிசாளராக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நியமிக்கப்பட்டார். தேசிய அமைப்பாளராக அமைச்சர் விமல் வீரவன்ச நியமிக்கப்பட்டார்.