தேசிய நோக்கங்கள் மற்றும் தேசிய நிகழ்ச்சி நிரலில் இருந்து விலகி குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு முன்னுரிமை வழங்கி கடந்த அரசாங்கம், அரச நிறுவனங்களை நடத்திச் சென்றதாக அமைச்சர் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தனியார் நிறுவனங்களை விட அரச நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிப்பது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க, கடந்த அரசாங்கம் செலுத்தாத கட்டணங்களை செலுத்த புதிய நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை கொண்டு வந்து செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.