ஜெனிவா மனித உரிமை ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ள புலம்பெயர் அமைப்புகள்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை தொடர்பான ஜெனிவா யோசனையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுமாறு 35 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஜெனிவா மனித உரிமை ஆணையாளர் மிச்செலி பெச்சலட்டிடன் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த யோசனை நிறைவேற்றப்பட்ட யோசனை என்பதால், மனித உரிமை ஆணைக்குழு அதனை முன்னெடுத்துச் செல்ல முடியும் என அந்த அமைப்புகள் கூறியுள்ளன.

இதனிடையே ஜெனிவா யோசனையில் இருந்து இலங்கை அரசு விலகினாலும் அது எதிர்வரும் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்படும். அப்போது யோசனை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அதேவேளை 2015 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட யோசனையில் இருந்து இலங்கை அரசு விலகி கொண்டமை ஏற்பதா இல்லையா என்பதை மனித உரிமை பேரவையில் அடுத்த வாரம் தீர்மானிக்கப்படவுள்ளது.