தேர்தலுக்கு பின் அணி மாறும் நபர்கள் -அனுரகுமார திஸாநாயக்க ஆரூடம்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருக்கும் பலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் இணைந்துக்கொள்வார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிலாபத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பழைய காலத்தில் புதிய அரசாங்கம் ஆட்சி அமைக்கும் போது, அதில் அங்கம் வகிக்கும் நபர்கள் மாறுவார்கள், ஆனால், தற்போது என்ன நடக்கின்றது. புதிய அரசாங்கம் ஆட்சி அமைக்கும் போது பழைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள், பதிய அரசாங்கத்திலும் அமைச்சர்களாக இருப்பார்கள் என அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.