அரச துரோக குற்றச்சாட்டில் மங்களவை கைது செய்ய வேண்டும்

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவை அரச துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸம்மில் தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் 30-1 யோசனைக்கு இணை அனுசரணை வழங்கியது சட்டவிரோதம். அப்படியான நடவடிக்கையை எடுக்க மங்கள சமரவீரவுக்கு எந்த வகையிலும் அதிகாரம் வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக அரச துரோக குற்றச்சாட்டின் அடிப்படையில் மங்கள சமரவீரவை கைது செய்ய வேண்டும் எனவும் மொஹமட் முஸ்ஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.