நாடாளுமன்ற தேர்தலுக்கான செலவு பில்லியன்களாக அதிகரிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்
33Shares

பொதுத்தேர்தலுக்கான செலவு மதிப்பீடு மேலும் அதிகரிக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஏற்கனவே இந்த தேர்தலுக்கு 5 பில்லியன் ரூபா செலவாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இது 7.5பில்லியன் ரூபாய்களாக அதிகரிக்கும் .

இந்தநிலையில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமானால் இந்த தொகை இன்னும் அதிகரிக்கும்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் ஒருவர் 2000 ரூபாவை மாத்திரமே செலுத்த வேண்டும்.

எனவே பல சுயாதீன வேட்பாளர்கள் இந்த முறை போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.