சஜித் தலைமையிலான கூட்டணியில் இணைந்தது தமிழ் முற்போக்கு முன்னணி

Report Print Steephen Steephen in அரசியல்

தமிழ் முற்போக்கு முன்னணி இன்று உத்தியோகபூர்வமாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக்கொண்டுள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டணியே தமிழ் முற்போக்கு முன்னணியாகும். மனோ கணேசன், பழனி திகாம்பரம், வீ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த மூன்று கட்சிகளின் தலைவர்களாவர்.

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய கட்சி நேற்று சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் உத்தியோகபூர்வமாக இணைந்துக்கொண்டது.