நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை!

Report Print Steephen Steephen in அரசியல்

நீதிபதிகளுடன் தொலைபேசியில் உரையாடியதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக சிறைச்சாலை அதிகாரிகள் ரஞ்சன் ராமநாயக்கவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர்.

அதேவேளை ஊடகங்களில் வெளியான குரல் பதிவுகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் ஒத்திருப்பதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.