ராஜபக்சவினருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காது! மனுஷ நாணயக்கார

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ராஜபக்சவினரை தோற்கடித்து சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவிக்கு கொண்டு வருவதற்காக சகல சக்திகளும் இணைந்து விரிவான கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காலி - யக்கலமுல்ல பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கிராம மட்ட பிரதிநிதிகளின் பயிற்சி பாசறையில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இதனை எவராவது எதிர்த்தால், அவர்கள் ராஜபக்சவினருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொடுக்கு நோக்கில் செயற்படும் நபர்கள்.

ராஜபக்சவினருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது.

தற்போது செய்ய வேண்டியது ராஜபக்சவினருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொடுப்பதை தவிர்ப்பது அல்ல, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடி இல்லை. அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரு சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளோம். ஒரு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற தயாராக இருக்கின்றோம்.

அந்த சின்னம் வேண்டும், அந்த செயலாளர் தேவை, அந்த தலைவர் வேண்டும் என ஏன் சிலர் கூறுகின்றனர்?. ராஜபக்சவினருக்கு எதிராக போராட விரும்பாதவர்களே இப்படியான கதைகளை கூறுகின்றனர்.

ராஜபக்சவினருக்கு எதிராக செயற்பட வேண்டுமாயின் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும். நாங்கள் அமைக்கும் கூட்டணியை சீர்குலைக்க எவராவது முயற்சித்தால், அவர்களின் தேவை ராஜபக்சவினருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொடுப்பது.

ராஜபக்சவினரை தோற்கடிக்கவே நாங்கள் அனைவரும் இணைந்து கூட்டணியை அமைத்துள்ளோம். ரணில் விக்ரமசிங்கவும் எமக்கு தேவை, சஜித் பிரேமதாசவும் தேவை.

இதன் காரணமாகலே அனைவரும் இணைந்து விரிவான கூட்டணியை உருவாக்கியுள்ளோம். வெற்றி பெற வேண்டும் என்பதே எமது தேவை.

மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக பதவிக்கு வருவதை தடுப்பதே எமது தேவை. சஜித் பிரேமதாசவை பிரதமராக பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எமது தேவை.

அதற்காக நாம் ஒன்றிணைந்து, இந்த பயணத்தை மேற்கொள்வோம் எனவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.