அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள பகிரங்க வேண்டுகோள்!

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் முகம் கொடுத்துள்ள சவாலை எதிர்கொள்ள சகல முஸ்லிம் அரசியல் அணிகளும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகிய அனைவரும் மீண்டும் கட்சியில் இணையுமாறு பகிரங்க அழைப்பை விடுப்பதாகவும் இதற்காக கட்சி எந்த அர்ப்பணிப்பையும் செய்ய தயாராக இருக்கின்றது எனவும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பொல்கொல்ல மகிந்த ராஜபக்ச கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29வது பிரதிநிதிகள் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எமது கட்சி பல சவால்களை எதிர்கொண்ட கட்சி. அதேபோல் பல வெற்றிகளை பெற்ற கட்சி.நாங்கள் பின்னடைவை சந்தித்திருந்தால், அதனை அனுபவமாக கொண்டு அடுத்த தேர்தலுக்கு வெற்றிகரமாக தயாராக அமைப்பு.

கடந்த ஆண்டு நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் மிகவும் கவலைக்குரிய நிலைமை, சவாலை எதிர்கொண்ட வருடம். அந்த சவாலை எதிர்கொண்டு எமது கட்சி தலைமைத்துவத்தை வழங்கியது.

அந்த சவாலான காலத்தை நாம் கடந்து வந்துள்ளோம். தற்போது புதிய நிலைமை காணப்படுகிறது. பல புதிய சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. அந்த சவால்களை வெல்லவும் அதற்கு தலைமைத்துவத்தை வழங்கும் பொறுப்பும் என் தலை மீது சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது எமது அரசியல் சிதறி சென்றுள்ளது. சில்லறை தலைவர்கள் உருவாகியுள்ளனர். எனினும் இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு முன்னணியை தயார்ப்படுத்த வேண்டிய காலம் வந்துள்ளது.

அடுத்த அரசாங்கத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவின்றி அமைக்க முடியாத வகையில் நாம் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இதற்காக சகல சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும். சிவில் அமைப்புகளை இணைத்துக்கொள்ள வேண்டும்.

அந்த சக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருக்கலாம். மக்கள் விடுதலை முன்னணியாக இருக்கலாம். இந்த சக்திகள் விரைவில் ஒரு புதிய அணியாக இணைவது சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எந்த கூட்டணியில் இணைந்து நாம் தேர்தலில் போட்டியிடுகின்றோம் என்பது தற்போது முக்கியமல்ல. சிறுபான்மையினர், சிறிய அரசியல் கட்சிகளை அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் அடக்கி வைக்க முடியுமா என எண்ணி செயற்பட்டு பிரதான கட்சிகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

தற்போதைய ஆளும் கட்சி இன்னும் ஒரு வருடத்தில் ஆட்சி கைப்பற்ற முடியும் என நம்பிக்கை கொண்டிருந்தால், 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமி இருந்திருக்காது.

இந்த சம்பவம் மூலம் நாட்டின் சுமார் 50 ஆண்டு அரசியல் சம்பிரதாயத்திற்கு ஏற்பட்ட கரும்புள்ளி சிறிய விடயமல்ல.

அன்று பலர் சில எதிர்பார்ப்புடன் இருந்த போதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த வகையில் அந்த அநீதியான செயலுடன் இணைவதில்லை என தீர்மானித்தது எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.