ஐ.நா செல்லும் போது கட்டுநாயக்காவில் இலக்கு வைக்கப்பட்டேன்! ஜெனீவாவில் அனந்தி ஆதங்கம்

Report Print Banu in அரசியல்

ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக செல்லும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலக்கு வைக்கப்பட்டதாக ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமாகிய அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் அவர் எமது செய்திச்சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலே இவ்வாறு கூறினார்.

அவர் இதன் போது மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஐ.நா சபையின் 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதாக தெரிவித்திருக்கின்றார். இது நாம் எதிர்பார்த்த முடிவே. யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கழிந்தும் ஈழத்தமிழர்களுக்கு கிடைக்காத நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்.

ஆனால் இன்று வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூட்டத்தொடரில் வெறுமனே அபிவிருத்திப்பணிகள் தொடர்பிலே உரையாற்றிச் சென்றிருக்கிறார்.

ஈழத்தமிழர்களை ஏமாற்றியது போல 30/ 1 தீர்மானத்திலிருந்து விலகி சர்வதேசத்தையும் இலங்கை ஏமாற்றியுள்ளது.

வழக்கமாக விமான நிலையத்தில் மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கைகளை பார்க்கிலும் இம்முறை ஜெனீவா வரும் போது குறிவைக்கப்பட்டு சோதனைகளில் அதிக சிரமங்களை நாம் எதிர்கொண்டோம் என்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,