அங்கவீனமுற்ற படையினர் தொடர்பில் அரசாங்கம் அமைதியாக இருக்கின்றது! ஹிருணிகா

Report Print Steephen Steephen in அரசியல்

அங்கவீனமுற்ற படையினரின் பிரச்சினைகள் சம்பந்தமாக கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கூடிய கவனத்தை செலுத்தியவர்கள் தற்போது அந்த விடயத்தில் அமைதியான நிலைப்பாட்டை கடைபிடிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், சிலர் படையினரின் பிரச்சினைகளை பயன்படுத்தி குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்ட விதத்தை மக்கள் புரிந்துக்கொண்டுள்ளனர் என கூறியுள்ளார்.

படையினர் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சில நடிகர் அங்கு சென்று முட்டிமோதி அழுத்தனர்.

மரியாதைக்குரிய பிக்குமார் அங்கு சென்று பிரித் நூல் கட்டினர். இவை எமது அரசாங்கத்தின் காலத்தில் நடந்தன. ஓய்வூதியம் கேட்டு இந்த படையினர் போராட்டம் நடத்தினர். தற்போது தாம் அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டதாக அந்த படையினர் கூறுகின்றனர்.

தற்போதும் அந்த படையினரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இதற்கு தானே அரசாங்கத்தை அமைத்தீர்கள், போராட்டம் நடத்தும் இடத்திற்கு சென்று பார்க்குமாறு நடிகர், நடிகைகளிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.