இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை!

Report Print Rakesh in அரசியல்

போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ராஜபக்சக்கள் பொறுப்புக்கூறுதலை முன்நகர்த்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. எனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை இலங்கை மீது சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்."

இவ்வாறு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவுக்கான இயக்குநர் ஜோன் பிசர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து அரசு விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜெனிவாக் கூட்டத் தொடரில் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரே ஜோன் பிசர் தனது டுவிட்டரில் மேற்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

"இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்க்ளுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை வெளியேறுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் எவரும் ஏமாறக்கூடாது. போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ராஜபக்சக்கள் பொறுப்புக்கூறுதலை முன்நகர்த்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.

எனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை இலங்கை மீது சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்" - என்றுள்ளது.