கிரிக்கெட் ரசிகர்கள் மீதான தாக்குதல் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் - நாமல்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையில் நேற்று ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள அவர்,

இந்த தாக்குதலை அருவருக்கத்தக்கதாக கருதி கண்டிப்பதாக கூறியுள்ளார். அத்துடன் இப்படியான சம்பவங்கள் மீண்டும் ஏற்படாத வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வருடங்களின் பின்னர் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண சுமார் 35 ஆயிரம் பேர் சென்றிருந்தனர்.

ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக அனுமதிச் சீட்டுக்களை விற்பனை செய்ய இரண்டு கவுண்டர்கள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன.

இதனால், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் வாக்குவாதமும் பதற்றமான நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும் மைதானத்தின் பாதுகாப்பு அதிகாரிகளும் ரசிகர்களை தாக்கியுள்ளனர்.

සූරියවැව මහින්ද රාජපක්ෂ ක්‍රීඩාංගනයේ පැවති ශ්‍රී ලංකාව හා බටහිර ඉන්දීය කොදෙව් දූපත් අතර තරගයේදී පොලීසිය හා ආරක්ෂක අංශ විසින් ප්‍රේක්ෂයින්ට පහරදීම පිළිකුලෙන් යුතුව හෙළා දකින අතර කඩිනම් පරීක්ෂණයක් පවත්වා නැවතත් මෙවැනි අවාසනාවන්ත සිදුවීම් ඇති නොවීමට රජය කටයුතු කළ යුතුය. https://t.co/yXSUI3yBaH— Namal Rajapaksa (@RajapaksaNamal) February 27, 2020