ஜெனிவா யோசனையில் விலகியதால் அச்சம் கொள்ள தேவையில்லை

Report Print Steephen Steephen in அரசியல்

அமெரிக்கா, ஜெனிவா மனித உரிமை பேரவையின் அங்கத்துவத்தில் இருந்து விலகி உள்ள பின்னணியில், இலங்கை இணை அனுசரணை வழங்கிய யோசனையில் இருந்து விலகியமை தொடர்பாக எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை என கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த தீர்மானம் காரணமாக ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை இரத்துச் செய்யப்படுமா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள கொடஹேவா, கடந்த அரசாங்கம் ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை பெற்று நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு செய்த காரியம் எதுவுமில்லை எனக் கூறியுள்ளார்.

7 சத வீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி வீதம் 1.9 வீதமாக வீழ்ச்சியடைந்தது. ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக்கொண்ட காலப் பகுதியிலேயே இது நடந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...