படையினர் மீது சர்வதேச சமூகம் சுமத்தும் குற்றச்சாட்டு அநீதியானது: கெஹெலிய

Report Print Steephen Steephen in அரசியல்

30 ஆண்டுகள் முழுவதும் நாட்டில் நடந்த யுத்தத்தை கடைசி இரண்டு வாரங்களுக்குள் சுருக்கி, நாட்டின் பாதுகாப்பு படையினருக்கு எதிராக சர்வதேச சமூகம் குற்றம் சுமத்துவது பெரிய அநீதி என ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மனிதாபிமானமிக்க இராணுவம் உயிர் தியாகத்துடன் அர்ப்பணிப்புடன் செய்த காரியத்தை போர்க்குற்றங்களின் அடிப்படையில், அவமதிப்புக்கு உள்ளாக்க சர்வதேசத்திற்கு இடமளிக்க போவதில்லை.

ஜெனிவா யோசனையான 30/1 இல் இறுதிக்கட்டப் போரில் கடைசி இரண்டு வாரங்களில் நடந்த விடயங்கள் பற்றியே கூறப்பட்டுள்ளது. இது எந்தளவுக்கு அநீதியானது. 30 ஆண்டுகள் யுத்தம் நடந்தது.

நாட்டின் தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தி, ஸ்ரீ மஹா போதி மீது தாக்குதல் நடத்தி, காத்தான்குடி பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்ட மக்களை கொன்றனர். இவை பற்றி பேசுவதில்லை.

போரில் இறுதி இரண்டு வாரங்களிலேயே நாட்டு மக்கள் எதிர்பார்த்த போரை முடிவுக்கு கொண்டு வந்தனர். போரை முடிவுக்கு கொண்டு வந்த அந்த இரண்டு வாரங்களில் ஏற்பட்ட பிரதிபலன்களுக்கு நாட்டு மக்கள் இழப்பீடு செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது. இது எந்தளவுக்கு அநீதியானது எனவும் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்