டயமன்ட் பிரின்ஸ் கப்பலில் இருந்த இலங்கையர்களை மீட்ட இந்தியா! மோடிக்கு நன்றி தெரிவித்த மகிந்த

Report Print Kanmani in அரசியல்

ஜப்பானில் நங்கூரம் இடப்பட்டிருந்த டயமன்ட் பிரின்ஸ் பயணிகள் கப்பலில் சிக்கி இருந்த இரண்டு இலங்கையர்களை பாதுகாப்பாக மீட்ட இந்தியாவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.

புதிய கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக இந்த கப்பலை ஜப்பானில் நங்கூரமிட்டு நிறுத்த சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

14 நாட்கள் பரிசோதனைகளின் பின்னர் கப்பலில் இருந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகாத நபர்களை மீண்டும் தமது நாட்டுக்கு அழைத்துச் செல்ல அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடந்த வாரம் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அதற்கமைய கப்பலில் இருந்த இலங்கையர்கள் இருவரும், இந்திய நாட்டவர்கள் 119 பேரும், நேபாளம், தென்கொரியா மற்றும் பேரு நாட்டவர்களையும் இந்திய அதிகாரிகள் தங்கள் நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில்,