சஜித்திற்கு ரணில் வைத்த செக்! இறுதி தீர்மானங்கள் அனைத்தும் ஐ.தே.கவின் கையில்

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய சக்தியின் அனைத்து விடயங்களும் ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவினாலேயே இறுதிப்படுத்தப்படும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

ஐக்கிய தேசிய சக்தி உத்தியோகபூர்வமாக எதிர்வரும் 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதாக சஜித் பிரேமதாச நேற்று அறிவித்திருந்தார்

இதன் நிமித்தம் அவருடைய முன்னணிக்கு பல கட்சிகளும் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

இந்தநிலையில் அவற்றுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் செய்துக்கொள்ளப்படும் என்று சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் குறித்த உடன்படிக்கைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவினால் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்று ரணில் சஜித்துக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய தேசிய சக்தியின் யாப்பும் ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே யாப்பில் சில திருத்தங்களை ஐக்கிய தேசியக்கட்சியின் சட்டத்தரணிகள் செய்துள்ளபோதும் அது தொடர்பில் சஜித் பிரேமதாச இன்னும் பதில் எதனையும் வழங்கவில்லை.