ரிசாட் பதியுதீனின் மனைவி குற்றப்புலனாய்வுத்துறையில் வாக்குமூலம்

Report Print Ajith Ajith in அரசியல்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் மனைவி குற்றப்புலனாய்வுத்துறையில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

ரிசாட் பதியுதீன் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் ஒருகட்டமாகவே அவரின் மனைவி மொஹமட் சகாப்தீன் ஆயிஷாவிடம் நேற்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

நேற்று காலை வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்ற அவர் பிற்பகல் அளவில் அங்கிருந்து வெளியேறினார்.

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர் தரப்பு அரசியல்வாதிகள் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது