சஜித்தால் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஆராயவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசிய சக்தியுடன் இணையுமாறு அதன் தலைவர் சஜித் பிரேமதாசவினால் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி இன்று ஆராயவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீகொத்தாவில் கூடுகிறது.

இதன்போது சஜித் தலைமையிலான கட்சியின் யோசனைகள் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் யாவும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவினால் ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என்று கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து குறித்தும் ஆராயப்படவுள்ளது.

இதேவேளை ரணிலின் இந்த கருத்து தொடர்பில் சஜித் பிரேமதாச இதுவரை எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

இதற்கிடையில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய சக்தி எதிர்வரும் 2ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.