இலங்கையின் தீர்மானம் தொடர்பில் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் அதிருப்தி

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகி கொண்டமை குறித்து பிரித்தானியாவும் ஏனைய உறுப்பு நாடுகளும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் யோசனை தொடர்பில் தமது அனுகுமுறையை மாற்றிக் கொண்டமை குறித்து தாம் அதிருப்தியடைந்துள்ளதாக அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் தாமும் இலங்கை தொடர்பில் யோசனையை முன்வைத்த ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளும் தொடர்ந்தும் இலங்கை தொhடர்பான 30-1 யோசனையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாடுகளில் உறுதியாக இருப்பதாக பிரித்தானியாவின் சர்வதேச மனித உரிமைகளுக்கான தூதுவர் ரிட்டா பிரஞ் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுடன் இந்த முக்கிய நாடுகளில் கனடா, ஜேர்மனி, வடமெசடோனியா போன்ற நாடுகள் அடங்கியுள்ளன.

இந்த நாடுகள் நேற்று ஜெனீவாவில் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டன.

அதில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி நிலையான சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இந்த நாடுகள் தமது அறிக்கையில் கோரியுள்ளன.