இலங்கையிடம் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையில் தேர்தல் ஒன்று நடத்தப்படும் நிலையில் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம் போர்க்குற்றம் தொடர்பான விடயங்களில் கடும்போக்கை விட்டுக்கொடுத்தல் , காணாமல் போனோர் விடயத்தில் நீதி, குடியியல் சமூகத்தின் பாதுகாப்பு, ஊடக சுதந்திரம் என்பவற்றை பாதுகாக்கும் வகையில் செயற்படவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் யோசனையின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகிக்கொண்டமையை அடுத்தே இந்த கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று ஜெனீவாவில் விடுத்துள்ளது

2015ஆம் ஆண்டு முதல் மனித உரிமை விடயங்களில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றம் கண்டு வந்தமையையும் ஐரோப்பிய ஒனறியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் இலங்கை தொடர்ந்தும் சர்வதேச பங்களாளிகளுடன் இணைந்து செயற்படுமானால் தாமும் இலங்கைக்கு உதவியளிக்கமுடியும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கை மரண தண்டனை நிறைவேற்று யோசனையை முற்றாக ஒழிக்கவேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது