பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கும் சஜித் பிரேமதாச

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

கொழும்பில் முதன்முறையாக போட்டியிடும் அவர் ஏற்கனவே தாம் போட்டியிட்டு வந்த ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்காக போட்டியிடுவதற்காக ஒருவரை தெரிவு செய்யும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் வழமைப்போன்று இந்த முறையும் கொழும்பிலேயே போட்டியிடவுள்ளார்.

இந்த நிலையில் சஜித் தலைமையிலான முன்னணியின் கீழ் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக்கட்சிக்கு அந்தக்கட்சியின் செயற்குழு இன்று ஒப்புதல் வழங்கினால் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 2ம் திகதி சஜித்தின் முன்னணி ஆரம்பிக்கப்படும் நிகழ்வில் பங்கேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.