ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு சஜித் பிரேமதாசவிற்கே!

Report Print Ajith Ajith in அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய சக்தி கட்சிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இது தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும், காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம், சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

ஏற்கனவே மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு முன்னணி மற்றும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய ஆகியன சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.