தமிழ் பேசும் மக்களுக்கு துரோகம் செய்யும் முஸ்லிம் தலைவர்கள்! அம்பலப்படுத்தும் தேரர்

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

முஸ்லிம் மக்களை ஏமாற்றி வீணாக்கி பிழைப்பவர்கள் தான் ஹிஸ்புல்லா, ரிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், அசாத்சாலி ஆகியோர்கள் என ஜனசெத பெரமுன கட்சியின் செயலாளர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்தார்.

திருகோணமலை உவர்மலையில் இன்று (28) இடம்பெற்ற யோகா நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த எம். எல். ஏ. ஹிஸ்புல்லா சம்பூர் பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் பேசும் ஆதிவாசிகளின் காணிகளைச் சுவீகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த போது யாராவது இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கினார்களா? அதேபோன்று பல வேலை வாய்ப்புகள் கிழக்கு மாகாணத்தில் வெற்றிடங்கள் இருந்தபோதிலும் தமிழ் பேசும் மக்களுக்கு யாருக்காவது அரச நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

2020 ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற இருக்கின்ற நிலையில் கிழக்கு மாகாணத்துக்கு எதிர்வரும் காலங்களில் ரவூப் ஹக்கீம், அசாத்சாலி, ஹிஸ்புல்லா மற்றும் ரிசாத் பதியுதீன் ஆகியோர் அனைத்து இடங்களுக்கும் சென்று எமது மக்களைப் பாதுகாக்க வேண்டும். நீங்கள் எமக்கு வாக்களியுங்கள் என கூறுவார்கள். அந்த நேரம் நீங்கள் பயமின்றி அவர்களுக்கு கூறுங்கள் நாட்டை பிளவுபடுத்தியவர்களுடன் ஒன்றிணைய மாட்டோம் எனவும் பயம் இன்று அச்சமின்றி கூறுங்கள் எனவும் ஜனசெத பெரமுன கட்சியின் செயலாளர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் குறிப்பிட்டார்.