சஜித் தலைமையிலான ஐக்கிய தேசிய சக்தியின் யாப்பு சில திருத்தங்களுடன் அங்கீகரிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய சக்தியின் யாப்பை இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு சில திருத்தங்களுடன் அங்கீகரித்துள்ளது.

எனினும் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் சின்னம் தொடர்பில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை என தெரியவருகிறது.

இந்த நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் கூடி சின்னம் தொடர்பான முடிவை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசிய சக்தியின் ஆரம்பக்கூட்டம் எதிர்வரும் இரண்டாம் திகதி நடைபெறும் போது அதில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளார்.