முஸ்லிம் காங்கிரஸின் இணைவு எமக்குப் பலமாகும்! சஜித் பெருமிதம்

Report Print Rakesh in அரசியல்

“ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பொதுக்கூட்டணியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூவ் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து கொண்டுள்ளமை எமக்குப் பாரிய பலமாகும்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் 'ஐக்கிய மக்கள் சக்தி' பொதுக் கூட்டணியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பொதுக்கூட்டணியில் நாடாளுமன்ற உ ஜனநாயகத்தை மையமாகக் கொண்டு செயற்படும் கட்சிகள் தொடர்ந்தும் இந்தக் கூட்டணியுடன் இணைந்த வண்ணம் உள்ளன.

அந்தவகையில், அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட பல தரப்பினர் கூட்டணியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டனர்.

கூட்டணியில் இன்னும் பலம் வாய்ந்த அரசியல் கட்சிகள் குறுகிய காலத்துக்குள் இணைந்து கொள்வார்கள். அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே பொதுக்கூட்டணி செயற்படும்.

கூட்டணியின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ உடன்பாட்டுடனும், கட்சியின் செயற்குழுவின் ஏகமனதான தீர்மானத்துக்கமையவும் உருவாக்கப்பட்ட சட்டபூர்வமான இந்தக்

கூட்டணியுடன் இவ்வாறாக கட்சிகள் வந்து இணைந்து கொள்கின்றமை பாரிய பலமாகும்" - என்றார்.