சர்வதேச நீதிமன்றத்தை நாடும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள்

Report Print Sujitha Sri in அரசியல்

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தில் ஒழுங்குப்படுத்தப்பட்ட பக்க அறை கூட்டமானது கடந்த வெள்ளிக்கிழமையன்று 26ஆம் இலக்க மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

இதில் முக்கிய பேச்சாளர்களான சர்வதேச மன்னிப்பு சபையின் ஐ.நாவிற்கான பொறுப்பாளரும், சர்வதேச மன்னிப்புச் சபையின் பொறுப்பாளரும் மற்றும் சட்ட வல்லுநர்களும் அடங்கிய நிபுணர் குழுவால் ஒழுங்குப்படுத்தப்பட்ட இந்த பக்க அறை அமர்வில்,

எதிர்காலத்தில் இலங்கை அரசை அல்லது இலங்கையை யாரும் மிக சாதாரண முறையில் கேள்விக்கு உட்படுத்த முடியாது. எனவே சர்வதேச விசாரணையும், சர்வதேச நீதிமன்றமுமே இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பிற்கான தீர்வொன்றை பெற்றுத் தரும் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் கூட்டமானது முடிவுறும் தருவாயில் பத்து நிமிடங்கள் கேள்வி நேரமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

அப்போது பிரான்ஸ் மனித உரிமை மையத்தின் இயக்குனரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ச.வி.கிருபாகரன் தனது கருத்தாக, கடந்த அரசாங்கத்திற்கு சர்வதேசம் ஐந்து வருடங்கள் வழங்கியிருந்தது.

நாங்கள் அதனை கூட நம்பவில்லை. ஏனென்றால் நம்பிக்கையை கொண்டு காலம் கடத்தும் செயற்பாடே இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இவ்வாறான ஏமாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் இலங்கையை ஏன் தொடர்ந்து நம்ப வேண்டும் என தெளிவாக தனது கேள்வியை எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த சர்வதேச தீர்ப்பாயத்தின் சட்ட வல்லுனர் Matt Pollard, தாம் தமது சட்ட திட்டங்களுக்கும், சர்வதேசத்தின் சட்ட திட்டங்களுக்கும் உட்பட்ட வேலையை செய்து வருகின்றோம்.

இதேவேளை தமிழ் சமூகத்திற்கு எம் உதவி எந்த வகையில் தேவையோ அந்த வகையில் நாம் அவர்களுக்கான உதவியை வழங்க தயாராக உள்ளோம் என அறிவித்துள்ளார்.

யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் இலங்கை இராணுவம் புரிந்த போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய விவரணப் படமொன்றும் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டு அனைவரையும் நிலைகுலைய செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


you may like this video...