ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இணை அனுசரணையிலிருந்த விலக அடிப்படை இதுவே! அம்பலப்படுத்தும் மஹிந்த

Report Print Ajith Ajith in அரசியல்

முன்னைய அரசாங்கத்தை போன்று இல்லாமல் தமது அரசாங்கம் பௌத்த மகா சங்கத்தினரின் உபதேசங்களுக்கு மதிப்பளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு உள்ள முக்கியத்துவத்தை முன்னைய அரசாங்கம் காப்பாற்றவில்லை.

அத்துடன் மகாசங்கத்தினரின் உபதேசங்களின் அடிப்படையிலேயே அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இணை அனுசரணையில் இருந்து விலகியது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை வரப்போகும் தேர்தலில் தமது அரசாங்கம் மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.