ஜெனிவா யோசனையில் இருந்து விலகியதால் பொருளாதார பாதிப்பு ஏற்படாது! அமுனுகம தெரிவிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை இணை அனுசரணை வழங்கிய யோசனையில் இருந்து விலகியமை மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்று எண்ண முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஜெனிவா யோசனை சம்பந்தமாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மனித உரிமை பேரவையின் 30/1 யோசனையில் இருந்து விலக எடுத்த தீர்மானம் சம்பந்தமாக தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஒன்றுக்கு வர முடியும்.

தற்போது காணப்படும் உலக நிலைமைகளுக்கு அமைய இதன் மூலம் இலங்கைக்கு கெடுதியான சர்வதேச அழுத்தங்கள் ஏற்படாது எனவும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.