பொதுபல சேனாவுக்கு வெளிநாடுகள் நிதி வழங்குகின்றன - விஜேதாச ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

பொதுபல சேனா அமைப்பு பௌத்த அடிப்படைவாதத்தை பரப்புவதற்காக இயங்கும் அமைப்பே அன்றி பௌத்தர்களுக்காகவோ அல்லது சிங்கள இனத்திற்காகவோ குரல் கொடுக்கும் அமைப்பு அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அந்த அமைப்புக்கு வெளிநாடுகள் நிதியுதவி வழங்கி வருகின்றன எனவும் அவர் கூறியுள்ளார். ஈஸ்டர் குண்டு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று அவர் இதனை கூறியுள்ளார்.

கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேனா அமைப்பு மேற்கொண்டு வரும் அடிப்படைவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்கும் பிரதான நாடு நோர்வே. இது சம்பந்தமாக பொதுபல சேனா அமைப்பின் பிரதானிகள் நோர்வே சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். வழிக்காட்டுதலுக்கும் நிதியுதவி வழங்கும் நபர்கள் இருக்கின்றனர்.

கடந்த அரசாங்கத்தில் புத்தசாசனம் மற்றும் நீதியமைச்சராக கடமையாற்றிய போது, மேற்கொண்ட விசாரணைகளில் இது தெரியவந்தது.

கூரகல உட்பட சில பிரதேசங்களில் பொதுபல சேனா அமைப்பு, முஸ்லிம் மக்களுடன் தேவையற்ற மோதல்களை ஏற்படுத்திக்கொண்டதுடன் இது இனவாத மோதலாக மாற்ற முயற்சித்தனர். நீதியமைச்சர் என்ற வகையில் தலையீட்டு அதனை தடுத்ததாகவும் விஜேதாச ராஜபக்ச, ஜனாதிபதி ஆணைக்குழுவில் குறிப்பிட்டுள்ளார்.